Wednesday, July 8, 2009

Not every man really lives like சிந்தாநதி

from சிந்தாநதி ☆
to mrnags@gmail.com
date Fri, May 22, 2009 at 5:49 PM

subject Chat with சிந்தாநதி ☆
mailed-by gmail.com

hide details May 22
Reply Follow up message

5:48 PM சிந்தாநதி: hello


5:49 PM me: hello
long time

5:50 PM will be back in 30 mts :)


சிந்தாநதி - இவரை இதுவரை நான் நேரில் சந்தித்ததில்லை. நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.

பாலபாரதி மூலம் செல்பேசியில் அறிமுகம் ஆனார்.

தமிழ் கணிமையில் மிகுந்த ஆர்வமிக்கவர். குறிப்பாக தமிழ்99 தட்டச்சுமுறையை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

அவர் எழுதிய “தமிழ் 99” கையேடு மிகவும் பிரசித்திப் பெற்றது.

தமிழக அரசு தான் “தமிழ் 99” தட்டச்சு முறையை அறிமுகப்படுத்தியது. பின்னர் அதனை மறந்தும் விட்டது. எனக்குத் தெரிந்து அரசு அலுவலர்கள் கூட அதனை பயன்படுத்தாமல் தான் இருந்தனர்.

ஆனால், “தமிழ் 99” முறையின் சாதகமான விஷயங்களைப் பதிவர்களிடமும், பொதுமக்களிடமும் முடிந்தவரை எடுத்துக் கூறி பலரை அம்முறைக்கு மாற்றியவர்.

“தமிழை தமிழால் தமிழாக தட்டச்ச தமிழ்-99 முறையை பயன்படுத்துவோம்” என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர்.

NHM Writer, NHM Converter மற்றும் NHM Lister உருவான கட்டத்திலும் சரி, பின்னர் ஒவ்வொரு புதுப்பித்தலிலும் இந்த மென்பொருள்களை முதலில் பயன்படுத்தி வழுக்களை தெரிவிப்பதிலும், பயனர் பார்வையில் சில வசதிகளை சேர்க்குமாறு வலியுறுத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

தனது நண்பர் வட்டத்திற்கு மட்டும் விநியோகம் செய்ய “தமிழ்99” முறை மட்டும் கொண்ட “NHM Writer”ன் பிரத்தியேக Build ஒன்று கேட்டார்.
செய்து கொடுத்தோம்.

ஏனோ, கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே அவரை அவ்வளவாக ஆன்லைனில் காண முடிவதில்லை.

நீண்ட நாள் கழித்து இவ்வருடம் மே 22’ஆம் தேதி ஆன்லைனில் வந்தார்.

அப்போது அவருடன் நடந்த உரையாடல் தான் மேலே கொடுக்கப் பட்டுள்ளது.

அரை மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு ஒரு வேலை விஷயமாக வெளியே சென்று திரும்பி வந்தால் நண்பரை ஜி-டாக்கில் காணவில்லை.

அதற்குப் பிறகு அவரை இன்னும் ஆன்லைனில் பார்க்க முடியவில்லை.

இனி அவர் வரப் போவதுமில்லை. :-(

சிந்தாநதியின் மரணம் குறித்து அவரின் வலைப்பதிவிலேயே வந்த அறிவிப்பு.

http://valai.blogspirit.com/archive/2009/07/07/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.html

Every man dies - Not every man really lives like சிந்தாநதி.

4 comments:

Athisha said...

ஆழந்த வருத்தங்கள் நண்பா..

Anonymous said...

வருந்துகிறேன், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

ராம்கி

கலையரசன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்|| எல்லாவற்றையும் அனுபவிப்வர்கள்.. சீக்கிரம் போயிடுவாங்கலோ?

தகடூர் கோபி(Gopi) said...

K.S. நாகராஜன்,

நம்பமுடியவில்லை. அதிர்ச்சியளிக்கிறது. :-(

"Not every man really lives like சிந்தாநதி"

உண்மை.

சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.