Sunday, December 13, 2009

NDTV Hindu தொலைக்காட்சியில் தமிழ் கணிமை மற்றும் NHM Writer

NDTV Hindu தொலைக்காட்சியில் தமிழ் கணிமை மற்றும் NHM Writer பற்றிய ByteIt நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு...

Wednesday, December 9, 2009

"Google Chrome" Extensions support - A minor issue with "NHM Writer" and a quick fix

As you know, software.nhm.in team keeps tracking the latest developments in the Web and Language technology and comes with the solutions for the users in case of any issues arising out these developments.

We were the first to release an updated version (NHM Writer 1.5.1.1.) to enable the "NHM Writer" users type in Google Chrome.

Now there is an another develoment with regard to Google Chrome.

Google Chrome now supports Extensions.

To enable this support, type chrome://extensions/ in the Google Chrome Address bar and goto "Extensions Gallery".

When testing some of the extensions, we found a minor compatibility issue of "NHM Writer" with "Google chrome" extensions.

To recreate this scenario,

1. open any chrome extension with a text area to type. (You can try "Chrome Bird" extension, an extension that helps you to tweet)

2. Press the toggle key to enable typing in your language through "NHM Writer".


You may notice that the window of the particular extension may hide and focus will be on the main chrome window.


To overcome this issue,

1. Click somewhere outside the chrome window (say "Task bar")

2. Click the particular chrome extension shortcut in the chrome window

3. Set cursor focussed on the text area of the chrome extension where you want to type

4. Press the toggle key to enable typing in your language through "NHM Writer"

5. Start typing.


We will try to fix this issue in NHM Writer in the next updated version in the near future.


Monday, December 7, 2009

தமிழக முதல்வர் அலுவலகத்தில் NHM Writer




“தமிழக முதல்வர் உதவியாளர்களின் கணினியில் ஒருங்குறி எழுத்துகள் தெரியவில்லை என்ற சிக்கல் இருந்தது. சச்சிதானந்தனின் குறிப்பின்படி என்எச்எம் ரைட்டர், என்எச்எம் கன்வர்ட்டர் (NHM Writer, NHM Converter) ஆகியவற்றைத் தரவிறக்கி, அந்தக் கணினியில் நிறுவினேன்.”

- அண்ணா கண்ணன்

மேலும் படிக்க, அண்ணா கண்ணனின் பதிவை வாசிக்கவும்.

அண்ணா கண்ணனைப் பற்றி அறிந்து கொள்ள... http://www.blogger.com/profile/03548583925837236414!

Wednesday, November 4, 2009

We are looking for a "Junior Programmer"

New Horizon Media wishes to include in its "software.nhm.in" team a "Junior Programmer" with decent analytical, logical and quick learning abilities to work in the field of "Language Computing".

Educational qualification :

* Graduation in any stream

* Knowledge in PHP, MySQL and .NET is an added advantage.

Don't have any of the the above requirements?

But still you can apply if you have these qualities, we look for:
  • Desire to work for Indian Languages
  • Self thinking with a sense of initiative & ownership
  • Love for mathematics and puzzle solving
  • High performance driven
  • New and innovative ways of thinking
  • Eagerness to solve problems
Probation period will be for 6 months with a monthly pay of upto Rs.10,000 depending upon the candidate's nature and skills.

On completion of the probation period, depending upon the the candidate's performance, she/he will be lifted as "Programmer".

Send your resume to software@nhm.in on or before 15th November 2009

Here is the Notification in the official site


Wednesday, July 8, 2009

Not every man really lives like சிந்தாநதி

from சிந்தாநதி ☆
to mrnags@gmail.com
date Fri, May 22, 2009 at 5:49 PM

subject Chat with சிந்தாநதி ☆
mailed-by gmail.com

hide details May 22
Reply Follow up message

5:48 PM சிந்தாநதி: hello


5:49 PM me: hello
long time

5:50 PM will be back in 30 mts :)


சிந்தாநதி - இவரை இதுவரை நான் நேரில் சந்தித்ததில்லை. நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.

பாலபாரதி மூலம் செல்பேசியில் அறிமுகம் ஆனார்.

தமிழ் கணிமையில் மிகுந்த ஆர்வமிக்கவர். குறிப்பாக தமிழ்99 தட்டச்சுமுறையை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

அவர் எழுதிய “தமிழ் 99” கையேடு மிகவும் பிரசித்திப் பெற்றது.

தமிழக அரசு தான் “தமிழ் 99” தட்டச்சு முறையை அறிமுகப்படுத்தியது. பின்னர் அதனை மறந்தும் விட்டது. எனக்குத் தெரிந்து அரசு அலுவலர்கள் கூட அதனை பயன்படுத்தாமல் தான் இருந்தனர்.

ஆனால், “தமிழ் 99” முறையின் சாதகமான விஷயங்களைப் பதிவர்களிடமும், பொதுமக்களிடமும் முடிந்தவரை எடுத்துக் கூறி பலரை அம்முறைக்கு மாற்றியவர்.

“தமிழை தமிழால் தமிழாக தட்டச்ச தமிழ்-99 முறையை பயன்படுத்துவோம்” என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர்.

NHM Writer, NHM Converter மற்றும் NHM Lister உருவான கட்டத்திலும் சரி, பின்னர் ஒவ்வொரு புதுப்பித்தலிலும் இந்த மென்பொருள்களை முதலில் பயன்படுத்தி வழுக்களை தெரிவிப்பதிலும், பயனர் பார்வையில் சில வசதிகளை சேர்க்குமாறு வலியுறுத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

தனது நண்பர் வட்டத்திற்கு மட்டும் விநியோகம் செய்ய “தமிழ்99” முறை மட்டும் கொண்ட “NHM Writer”ன் பிரத்தியேக Build ஒன்று கேட்டார்.
செய்து கொடுத்தோம்.

ஏனோ, கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே அவரை அவ்வளவாக ஆன்லைனில் காண முடிவதில்லை.

நீண்ட நாள் கழித்து இவ்வருடம் மே 22’ஆம் தேதி ஆன்லைனில் வந்தார்.

அப்போது அவருடன் நடந்த உரையாடல் தான் மேலே கொடுக்கப் பட்டுள்ளது.

அரை மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு ஒரு வேலை விஷயமாக வெளியே சென்று திரும்பி வந்தால் நண்பரை ஜி-டாக்கில் காணவில்லை.

அதற்குப் பிறகு அவரை இன்னும் ஆன்லைனில் பார்க்க முடியவில்லை.

இனி அவர் வரப் போவதுமில்லை. :-(

சிந்தாநதியின் மரணம் குறித்து அவரின் வலைப்பதிவிலேயே வந்த அறிவிப்பு.

http://valai.blogspirit.com/archive/2009/07/07/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.html

Every man dies - Not every man really lives like சிந்தாநதி.

Friday, June 26, 2009

அப்பப்போ சாபமிடும் தாமரை! - Nonsense




கவிஞர் தாமரை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கருஞ்சாபம் ஒன்றை இட்டுள்ளார்.

சாபங்கள் பலிப்பதில்லை என எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இந்தப் பதிவிற்கு காரணம், அவர் தம் முட்டாள்தனத்தால் தமிழர்களிடையே உருவாக்கும் பிரிவினைதான்.

இந்தியர்களில் எத்தனையோ பேர் காஷ்மீர் பிரச்சனை, வடகிழக்கு இந்தியாவில் நிலவும் பிரச்சனை பற்றிக்கூடத் தெரியாமல், தங்களின் அன்றாடப் பிரச்சனையைக் கூட தாண்ட முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எல்லோருக்கும் உங்களின் இந்த வரிகள் பொருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

“இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!”

“ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓட வைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப் போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக் குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!”

இது போன்று, இதை விடக் கொடுமையான வரிகள்.

கருணா ஈழத்தமிழன் தான். இந்தப்போரில் முக்கிய துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டவர். அதனால் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் நீங்கள் சபிப்பீர்களா? இல்ல.. இதுக்கு முன்னாடியே நீங்க சபிச்சு, அதனாலதான் இவ்வளவு கொடுமைகளும் நடந்ததா?

இப்படித்தான் தேர்தலுக்கு முன்னாடி ஒரு கூட்டத்தில் ஜெயலலிதாவை அமாவாசை என்றும், கலைஞரை அமாவாசைக்கு அடுத்த நாளென்றும் சொன்னீர்கள்.

கூடவே கலைஞர் பதவியை விட்டெறிந்தால் அவர் பின்னாடியே வந்திருப்போம் என்று டயலாக் பேசுனீர்கள்.

நீங்கள் நல்ல கவிஞர் மட்டுமல்ல.. வசனகர்த்தாவும் தான் என்று அன்றுதான் புரிந்தது.

ஏன்.. எத்தனை ஆண்டுகளாக வைகோ ஈழத்தமிழர்களுக்காக சுயநலமின்றி குரல் கொடுத்திருப்பார்! இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் பின்னால் எத்தனைப் பேர் சென்றீர்கள்? அவருக்காக எத்தனைப் பேர் பக்க பலமாக நின்றீர்கள்?

சமுதாயத்தை சீரழிக்கிற மாதிரி சில சினிமாக்கள் எடுக்குறாங்களே! அதனால சினிமாவிற்கு பாட்டெழுதுவதையே விட்டு விடுவீர்களா? அதுக்கெல்லாம் கவிஞர் அறிவுமதிக்கு இருக்கிற மாதிரி தெளிவும், நேர்மையும் வேண்டும்.

தெளிவாக இருப்பவர்கள் உங்களைப் போன்று அரைவேக்காடுத்தனமாக உளற மாட்டார்கள்.

அது எப்படி! இவ்வளவு கொந்தளிப்பும் விஜய் அவார்ட்ஸ் வாங்கும்போது விடுமுறையில் சென்று விட்டதா?

அந்த மேடையில் உங்களுக்கு ஈழப்பிரச்சனை எல்லாம் மறந்துபோய் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போகும் மகளிர் மசோதா பற்றித்தானே பேசினீர்கள்! அப்போ அவார்ட் வாங்குற சந்தோஷத்துல திடீர்னு இந்தியப் பிரஜை ஆகிட்டீங்களா?

நீங்கள் எப்படிப் பட்டவராகவும் இருந்து விட்டுப் போங்கள். உங்கள் தொழில் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டது.

ஒட்டு மொத்த இந்தியாவையும் சபிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்..

நீங்கள் சபித்தவர்களில் எத்தனைப் பேர், உங்கள் சாபத்தின் காரணத்திற்கு துணை போனவர்கள்?

Thamarai's words are nothing but utter nonsense.

Saturday, February 21, 2009

கிழக்கு 5 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

கிழக்கு 5 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் -முதல் நாள்

சில படங்கள்



உமாசங்கர் ஐ.ஏ.எஸ் திறந்து வைக்கிறார். அருகில் மாலன், NHM'ன் இயக்குநர்களில் ஒருவரான சத்யநாராயண்


இ-புத்தகங்களைப் பற்றி சத்யநாராயண் விளக்குகிறார்


அருகில் நான்.


விழா பற்றிய தகவல், இங்கே