Friday, June 26, 2009
அப்பப்போ சாபமிடும் தாமரை! - Nonsense
கவிஞர் தாமரை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கருஞ்சாபம் ஒன்றை இட்டுள்ளார்.
சாபங்கள் பலிப்பதில்லை என எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இந்தப் பதிவிற்கு காரணம், அவர் தம் முட்டாள்தனத்தால் தமிழர்களிடையே உருவாக்கும் பிரிவினைதான்.
இந்தியர்களில் எத்தனையோ பேர் காஷ்மீர் பிரச்சனை, வடகிழக்கு இந்தியாவில் நிலவும் பிரச்சனை பற்றிக்கூடத் தெரியாமல், தங்களின் அன்றாடப் பிரச்சனையைக் கூட தாண்ட முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எல்லோருக்கும் உங்களின் இந்த வரிகள் பொருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
“இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!”
“ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓட வைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப் போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக் குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!”
இது போன்று, இதை விடக் கொடுமையான வரிகள்.
கருணா ஈழத்தமிழன் தான். இந்தப்போரில் முக்கிய துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டவர். அதனால் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் நீங்கள் சபிப்பீர்களா? இல்ல.. இதுக்கு முன்னாடியே நீங்க சபிச்சு, அதனாலதான் இவ்வளவு கொடுமைகளும் நடந்ததா?
இப்படித்தான் தேர்தலுக்கு முன்னாடி ஒரு கூட்டத்தில் ஜெயலலிதாவை அமாவாசை என்றும், கலைஞரை அமாவாசைக்கு அடுத்த நாளென்றும் சொன்னீர்கள்.
கூடவே கலைஞர் பதவியை விட்டெறிந்தால் அவர் பின்னாடியே வந்திருப்போம் என்று டயலாக் பேசுனீர்கள்.
நீங்கள் நல்ல கவிஞர் மட்டுமல்ல.. வசனகர்த்தாவும் தான் என்று அன்றுதான் புரிந்தது.
ஏன்.. எத்தனை ஆண்டுகளாக வைகோ ஈழத்தமிழர்களுக்காக சுயநலமின்றி குரல் கொடுத்திருப்பார்! இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் பின்னால் எத்தனைப் பேர் சென்றீர்கள்? அவருக்காக எத்தனைப் பேர் பக்க பலமாக நின்றீர்கள்?
சமுதாயத்தை சீரழிக்கிற மாதிரி சில சினிமாக்கள் எடுக்குறாங்களே! அதனால சினிமாவிற்கு பாட்டெழுதுவதையே விட்டு விடுவீர்களா? அதுக்கெல்லாம் கவிஞர் அறிவுமதிக்கு இருக்கிற மாதிரி தெளிவும், நேர்மையும் வேண்டும்.
தெளிவாக இருப்பவர்கள் உங்களைப் போன்று அரைவேக்காடுத்தனமாக உளற மாட்டார்கள்.
அது எப்படி! இவ்வளவு கொந்தளிப்பும் விஜய் அவார்ட்ஸ் வாங்கும்போது விடுமுறையில் சென்று விட்டதா?
அந்த மேடையில் உங்களுக்கு ஈழப்பிரச்சனை எல்லாம் மறந்துபோய் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போகும் மகளிர் மசோதா பற்றித்தானே பேசினீர்கள்! அப்போ அவார்ட் வாங்குற சந்தோஷத்துல திடீர்னு இந்தியப் பிரஜை ஆகிட்டீங்களா?
நீங்கள் எப்படிப் பட்டவராகவும் இருந்து விட்டுப் போங்கள். உங்கள் தொழில் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டது.
ஒட்டு மொத்த இந்தியாவையும் சபிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்..
நீங்கள் சபித்தவர்களில் எத்தனைப் பேர், உங்கள் சாபத்தின் காரணத்திற்கு துணை போனவர்கள்?
Thamarai's words are nothing but utter nonsense.
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அறச்சீற்றம்? :-)
அடிச்சி ஆடுங்க...
ஏற்கனவே இங்கௌ ஆறெல்லாம் வற்றி தான் போயிருக்குங்க..மகக்ள் சோறு இல்லாமல் கஷ்ட்டபடறாங்க..இவங்க எதுக்கு த்னியா சாப்ம் கொடுக்குனுமுன்னு தெரியல?
உங்களுக்கு விஷயமே தெரியாத தாமரை ’நைட்டிங்கேளாக’ மாறி அகதிகள் முகாமில் தான் தங்குபோகிறாராம், அவர் சொத்தை யெல்லாம் அந்த அகதிகள் வாழ்வுக்காக எழுதி வைத்துவிட்டாராம்!
சாபம் அளித்ததுக்கே இப்படி கோவம் வந்து எகிறுறீங்களே, அதை நிஜமாக நடத்தும் இந்தியா மேல தாமரைக்கு கோபம் வரதுல என்ன தப்பு?
தாமரையை திட்டும் நீங்கள் இந்தியா நடாத்தும் தமிழர் அழிப்பை புன்னகையுடன் ரசித்துக்கோன்டிருப்பது எதைக்காட்டுகிறதுன்னு உலகமே அறியும்.
//தாமரையை திட்டும் நீங்கள் இந்தியா நடத்தும் தமிழர் அழிப்பை புன்னகையுடன் ரசித்துக்கோன்டிருப்பது எதைக்காட்டுகிறதுன்னு உலகமே அறியும்.//
சக்திவேல்:
நான் புன்னகையுடன் ரசிச்சதை நீங்க ஒளிஞ்சு நின்னு பார்த்தீங்களா?
என்னோட இந்த பதிவிற்கான காரணமே ஈழப்பிரச்சனையில் ஒன்றுமே செய்ய முடியாதவர்களாய் இருந்த உங்களை, என்னைப் போன்ற கோடிக்கணக்கான இந்தியர்களை ஏன் ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்ட வேண்டும் என்பதுதான்!
உண்மையான காரணிகளை எதிர்க்க துணிவில்லாததனால் தானே சம்பந்தமில்லாதவர்களை நோக்கி வசை பாடுகிறீர்கள்?
ஒட்டு மொத்த இந்தியாவை எதிரியாக பார்க்கும் மனோபாவத்தினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. மக்களிடையே தேவையில்லாத வெறுப்பை உண்டாக்குவதைத் தவிர!
ஜெய் ஹோ!
இந்தியப் பெண்களை இழிவு செய்வதாக நினைத்துக் கொண்டு தன்மீதும் சேற்றை வாரி பூசிக்கொண்டு விட்டார் தாமரை.அவர் சிங்களப்பெண்களைப் பார்த்துக்கூட அப்படிப் பட்ட வரிகளை கூறக்கூடாது. ஈழத்தமிழச்சிகளை இனவெறியர் இழிவு செய்த போதும் தமிழ்ப்போராளிகள் சிங்களப்பெண்களை அசிங்கப்படுத்தியது இல்லை. இதுதான் மனிதம், தமிழர் குணம். அதை விடுத்து அவன் பீயை திங்குறான்னா நானும் தின்பேன் என்றால் என்ன செய்வது?
இப்படித்தான் சீமான் சிங்கள குழந்தைகளை கொல்வோம் என்றார். இவர்கள் ஈழப்போராட்டத்தையே இழிவு செய்கின்றனர்.
/*
உண்மையான காரணிகளை எதிர்க்க துணிவில்லாததனால் தானே சம்பந்தமில்லாதவர்களை நோக்கி வசை பாடுகிறீர்கள்?
*/
இந்தியாவின் பரிபூரன ஆசியுடன் மற்றும் உதவியுடந்தான் இக்காரியங்களைசெய்து முடித்தோம் என்று இலங்கை அரசாங்கமே ஒத்துக்கொள்கிறது அதை மறுத்து இந்தியாவும் ஒன்றும் சொல்லவில்லை. இதுக்கு என்ன சொல்லுறீங்க?
நிஜமாக செயலில் செய்வது சரி ஆனால் சாபம் போடுவது தப்பா? உங்கள் நியாயத்தராசில்?
சக்திவேல்:
தமிலிஷில் உங்கள் கமெண்டை அழித்தது நான் தான். இரண்டு இடங்களில் பதில் சொல்ல வேண்டாம் என்பதற்காக!
நான் இந்திய அரசு செய்தது சரி என்று சொல்லவில்லை. அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் நீங்கள் இழுப்பது சரியில்லை என்று தான் சொல்கிறேன்.
//நீங்கள் நல்ல கவிஞர் மட்டுமல்ல.. வசனகர்த்தாவும் தான்//
கடுமையாக ஆட்சேபிக்கிறேன். தாமரைக்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சினிமாப்பாட்டு என்று அவர் இதுவரை எழுதியதெல்லாம் வெறும் வசனக்குப்பை.
/*
நான் இந்திய அரசு செய்தது சரி என்று சொல்லவில்லை. அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் நீங்கள் இழுப்பது சரியில்லை என்று தான் சொல்கிறேன்.
*/
என்னங்க இது, தவறு செய்தவனை விட்டு விட்டு பக்கத்திலிருப்பவனையா திட்ட முடியும்?. ஈழத்திலிருந்து ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இந்தியவை சபித்துக்கொன்டுதான் இருக்கிறார்கள். எங்கள் இந்தியாவை திட்டாதீர்கள், நாங்கள் எதுவுமே செய்யலைன்னுகூட சொல்லமுடியாமல் இருக்கின்றோம்.
தாமரை இந்தியாவிலிருந்துகொன்டு சொல்லுவதுதானே உங்களுக்கு பொறுக்கலை? அதை ஒரு ஈழத்தாயின் ஈணக்குரலாக நினைத்துக்கொன்டு அதுக்கு பதில் சொல்ல முடியுமா உங்களால்?
சக்திவேல்:
//அதை ஒரு ஈழத்தாயின் ஈணக்குரலாக நினைத்துக்கொன்டு அதுக்கு பதில் சொல்ல முடியுமா உங்களால்?//
சொன்னது ஒரு ஈழத்தாயாக இருந்திருந்தாலும், இது சரியில்லை என்று தான் சொல்வேன்.
நானும், நீங்களும் இந்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்திலா இருக்கிறோம்?
நீங்களும் நானும் எதுவுமே செய்யவில்லை. அதனால் உங்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் தேவையில்லை.
செய்யாத குற்றத்தை நீங்களே வம்படியாக உங்கள் மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு, அதை இன்னும் யார் மேல் எல்லாம் இழுத்துப் போடலாம் என்று வேறு யோசிக்கிறீர்கள்.
உங்களுக்கு மேலும் பதில் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கேள்விகளை அனுப்பவும்.
*
சொன்னது ஒரு ஈழத்தாயாக இருந்திருந்தாலும், இது சரியில்லை என்று தான் சொல்வேன்.
*/
அப்புடீன்ன நீங்கள் இந்தியாவைத்திட்டியபிறகுதானே தாமரையை திட்ட வேன்டும்.தாமரையை திட்டுவ்துக்குன்னே ஒரு பதிவுபோட்டு அதில் தவறுசெய்த இந்தியா பத்தி ஒன்னுமே சொல்லலையே ஏன்? நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்கள் எதோ தமிழர்கள்தானே. அதனால் பரவா இல்லை ஆனால் ஒரு காஷ்மீரத்துக்காரனை, கர்னாடகாரனை யாரும் சாபம் மட்டும் விட்டால் மனம் படாத பாடுபட்டுப்போகும் அப்படித்தானே?
யப்பா சாமி.. முடியல..
என்ன ஒரு அழிச்சாட்டியம்?
நான் இப்போ என்ன செய்யனும் சக்திவேல் சார்?
ஒரு பதிவு போட்டு.. 543 பாராளுமன்ற தொகுதிகளும் பூமிக்குள்ள போகட்டும்னு சாபம் கொடுக்கணுமா?
இல்ல... “உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!”னு என்னையும் கவிதைங்கிற பேர்ல உளறச் சொல்றீங்களா?
யப்பா.. யாராவது வந்து என்னை காப்பாத்தக் கூடாதா? :-)
\\ யப்பா.. யாராவது வந்து என்னை காப்பாத்தக் கூடாதா? :-) \\
இதையெல்லாம் பதிவு எழுதறதுக்கு முன்னால யோசிக்கணும்..
//இதையெல்லாம் பதிவு எழுதறதுக்கு முன்னால யோசிக்கணும்..//
:))
**கண்ணகி முதலில் கோவலனைத்தான் எரிச்சிருக்கணும்"...
அவங்களே அதை விட்டுட்டூ ஒட்டுமொத்த மதுரையையே எரிச்சுட்டாங்க....மத்தவங்க என்ன பாவம் செய்தாங்க?!.
பாண்டிய மன்னன் தன் தப்பை தானே உணர்ந்த பின்னாலும் கூட கண்ணகி எதுக்கு அப்படி பண்ணினாங்க?
**தாமரையின் வரிகளை உணர்ந்துகொள்ள ஒன்று ஈழமண்ணின் வலிகளை அனுபவித்து தப்பிப்பிழைத்து வந்திருக்க வேண்டும். இல்லையெனில் மனித உணர்வுகளோடு உலாவரவேண்டும்.
வாய்புளிச்சுதா? மாங்காய் புளிச்சுதா? என்பது போல 'இதைச்சொன்னது தாமரை என்பதால் ஏதேதோ விமர்சிக்கின்றீர்கள்.
இழப்பின் வலியில் இருப்பவனுக்குத்தானே கடுப்புத்தெரியும்?!..
சாபம் அளித்ததுக்கே இப்படி கோவம் வந்து எகிறுறீங்களே, அதை நிஜமாக நடத்தும் இந்தியா மேல தாமரைக்கு கோபம் வரதுல என்ன தப்பு?
தாமரையை திட்டும் நீங்கள் இந்தியா நடாத்தும் தமிழர் அழிப்பை புன்னகையுடன் ரசித்துக்கோன்டிருப்பது எதைக்காட்டுகிறதுன்னு உலகமே அறியும்.
/*
உண்மையான காரணிகளை எதிர்க்க துணிவில்லாததனால் தானே சம்பந்தமில்லாதவர்களை நோக்கி வசை பாடுகிறீர்கள்?
*/
இந்தியாவின் பரிபூரன ஆசியுடன் மற்றும் உதவியுடந்தான் இக்காரியங்களைசெய்து முடித்தோம் என்று இலங்கை அரசாங்கமே ஒத்துக்கொள்கிறது அதை மறுத்து இந்தியாவும் ஒன்றும் சொல்லவில்லை. இதுக்கு என்ன சொல்லுறீங்க?
நிஜமாக செயலில் செய்வது சரி ஆனால் சாபம் போடுவது தப்பா? உங்கள் நியாயத்தராசில்?
/*
நான் புன்னகையுடன் ரசிச்சதை நீங்க ஒளிஞ்சு நின்னு பார்த்தீங்களா?
*/
அப்புறம் என்ன சார், தாமரை சாபத்தை கன்டு கொதித்தெழும் நீங்கள், இந்தியா செய்வதை குறித்து ஏதுமே சொல்லலையே. அப்புடீன்ன்ன என்ன அர்த்தம்?
/*
நான் இந்திய அரசு செய்தது சரி என்று சொல்லவில்லை. அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் நீங்கள் இழுப்பது சரியில்லை என்று தான் சொல்கிறேன்.
*/
என்னங்க இது, தவறு செய்தவனை விட்டு விட்டு பக்கத்திலிருப்பவனையா திட்ட முடியும்?. ஈழத்திலிருந்து ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இந்தியவை சபித்துக்கொன்டுதான் இருக்கிறார்கள். எங்கள் இந்தியாவை திட்டாதீர்கள், நாங்கள் எதுவுமே செய்யலைன்னுகூட சொல்லமுடியாமல் இருக்கின்றோம்.
தாமரை இந்தியாவிலிருந்துகொன்டு சொல்லுவதுதானே உங்களுக்கு பொறுக்கலை? அதை ஒரு ஈழத்தாயின் ஈணக்குரலாக நினைத்துக்கொன்டு அதுக்கு பதில் சொல்ல முடியுமா உங்களால்?
/*
சொன்னது ஒரு ஈழத்தாயாக இருந்திருந்தாலும், இது சரியில்லை என்று தான் சொல்வேன்.
*/
அப்புடீன்ன நீங்கள் இந்தியாவைத்திட்டியபிறகுதானே தாமரையை திட்ட வேன்டும்.தாமரையை திட்டுவ்துக்குன்னே ஒரு பதிவுபோட்டு அதில் தவறுசெய்த இந்தியா பத்தி ஒன்னுமே சொல்லலையே ஏன்? நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்கள் எதோ தமிழர்கள்தானே. அதனால் பரவா இல்லை ஆனால் ஒரு காஷ்மீரத்துக்காரனை, கர்னாடகாரனை யாரும் சாபம் மட்டும் விட்டால் மனம் படாத பாடுபட்டுப்போகும் அப்படித்தானே?
/*
யப்பா சாமி.. முடியல..
என்ன ஒரு அழிச்சாட்டியம்?
நான் இப்போ என்ன செய்யனும் சக்திவேல் சார்?
*/
உங்களை ஒன்னுமே செய்யச்சொல்லலை சார், தாமரை சொன்னதில் தவறே இல்லை, அது ஒரு இயல்பான ஈழத்தாயின் உணர்ச்சிதான். இதுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட தேவை இல்லைன்னு சொல்லுறேன். இப்படி உணர்ச்சிவசப்படுபவர் தமிழர்கள் அங்கு அழிக்கப்படும்போதும் உணர்ச்சிவசப்பட்டிருக்கனும். நீங்கள் சாபமிடனும்ன்னு நான் அழிச்சாட்டியம் பன்னலை.
வெற்றிச்செல்வி & சக்திவேல்:
அங்கே மக்கள் படும் துன்பங்களை உணர்ந்தவன் தான் நான். நான் இந்திய அரசுக்காக வக்காலத்து வாங்கவும் இல்லை.
தாமரை போல் அளவக்கதிகமாக உளறுபவர்களால் பிரச்சனை திசை திருப்பப்படுகிறது. ஒன்று தாமரை போல் இரு.. இல்லை ராஜபக்சே போல் இரு.. என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.
என்னைப் பொறுத்தவரை இருவருமே முட்டாள்கள்.
ராஜபக்சே இந்திய அரசை ஈழ மக்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் பங்கு பெற செய்தார்.
தாமரை போன்ற ஆட்கள் இந்திய மக்களை அந்நியப் படுத்திகிறார்கள்.
சக்திவேல் சார்.. நீங்க அமெரிக்காவில் தானே இருக்கீங்க? ஈராக்கில் நடைபெற்ற கொடுமைகளுக்கு நீங்கள் தான் காரணமா?
/*
சக்திவேல் சார்.. நீங்க அமெரிக்காவில் தானே இருக்கீங்க? ஈராக்கில் நடைபெற்ற கொடுமைகளுக்கு நீங்கள் தான் காரணமா?
*/
நாகராஜன் சார்,
ஈராக்கில் கொடுமைக்கு காரனமானவர்களை அக்கொடுமைக்கு காரனமில்லத அனைவரும் சபித்துக்கொன்டுதான் இருக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் சபிக்கப்படுவதில்லை. நீங்கள் தயவுசெய்து தாமரை கவிதையை நன்றாக படித்துப்பாருங்கள்.
சக்திவேல்:
//ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!
ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓட வைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப் போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக் குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!//
இவை ஒரு சில நபர்களை மட்டும் தாக்கும் வரிகளா? இல்லை ஒட்டு மொத்த இந்தியாவையும் தாக்கும் வரிகளா?
முழுசா படிச்சதனால்தான் இந்தப் பதிவே!
ஒரு கவிதையில் சபித்ததற்கே நான்சென்ஸ் என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கு பதறுகிறது...
ஆனால், நிஜமாகவே கொன்று குவித்தார்களே...உயிருடன் மண்ணில் புதைத்தார்களே...எவ்வளவு எரியும்??
*/
இவை ஒரு சில நபர்களை மட்டும் தாக்கும் வரிகளா? இல்லை ஒட்டு மொத்த இந்தியாவையும் தாக்கும் வரிகளா?\*/
நாகராஜன் சார், கவிதையை நன்றாக கவனியுங்கள்
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த
ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிய வைத்த
ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓட வைத்த
மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்திய
இந்தியர்களைத்தான் இந்த சாபம் சேரும்.
நாம் இந்தியன்தான் நாம் இதைச்செய்யவில்லை எனவே நம்மை இது சேராது. இதில் ஏன் உங்களுக்கு இத்தினி கோபம்?
nice post. I like your attitude . I hope I got u.
அதுசரி & சக்திவேல் :
கொன்று குவித்ததை யாராலும் ஏற்க முடியாது. இங்கு தீக்குளித்து இன்னுயிரை தியாகம் செய்த முத்துக்குமார் ஒரு இந்தியன் தானே? இங்கு எத்தனைப் பேர் அங்கே நடந்த கொடுமைக்காக தனது உயிரையும், நிம்மதியையும் இழந்தார்கள் என்று எனக்கு தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
அப்படி இருக்க ஏதோ ஒட்டு மொத்த இந்தியாவும் இங்கே இருந்து படையெடுத்து அங்கே அனைவரையும் கொன்று குவித்தது போல் சிலர் உளறுகிறார்கள்.
கவிதையை மொத்தமாக படித்துப் பாருங்கள். சக்திவேல் சாருக்கும் நான் சொல்ல வருவது புரிந்திருக்கும். ஆனால், அவரால் ஏனோ தனது விதண்டாவாதத்தை விட முடியவில்லை. பின்னூட்டங்களை அனுமதிக்காமலே இருந்திருப்பேன். உங்கள் உணர்வுகளையும், ஆதங்கத்தையும் கொட்ட இந்த பின்னூட்டப் பெட்டி ஒரு வடிகாலாக இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டு விட்டேன்.
என்னைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பவர்களும், அரசியல்வாதிகளும் மட்டும் இந்தியா இல்லை. இந்தியா மிகப் பெரியது. மிகப்பெரிய மனதும் உடையது.பல மதத்தவர்கள், மொழியுடையவர்கள் முடிந்தவரை ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
சிலர் வீண் பழி சுமத்துவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. உடனே, அங்கு கொன்று குவித்த போது நீ என்ன செய்தாய்? என்று திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்காதீர்கள். என்னால் அங்கே போரை நிறுத்த ஒன்றும் பிடுங்கியிருக்க முடியாது. உங்களைப்போலவே!
ஜெய் ஹிந்த்!
//"அப்பப்போ சாபமிடும் தாமரை!"//
எப்போதும் விடுவதற்கு சாபம் ஒன்றும் மூச்சல்ல!
அது இருக்கட்டும், இலங்கை அரசுக்கு உதவ முடிவு செய்து இருக்கும் விஞ்ஞானி திரு. ஸ்வாமிநாதன் அவர்களை, அச்செயலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி msswami@mssrf.res.in என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கு புண்ணியம் உண்டாகும்!
விஜய் அவார்ட்ஸ்ஸில் அவருக்கு 33% கிடைத்தது பற்றி தான் சந்தோஷப்பட்டார். மற்றபடி அவரின் ஈழ உணர்வு ஒரு நாடகமே.
sridhar :
நான் தாமரையின் ஈழ உணர்வை போலியானதென்று எண்ணவில்லை.
பின்னூட்டமிட்ட சக்திவேல், அதுசரி, வெற்றிச்செல்வி போன்றோருக்கு உள்ளது போல irrational அது!
Post a Comment