இப்போது நான் பெங்களூருக்கு சதாப்தி எக்ஸ்பிரசில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.
ரயில் பெட்டிக்குள் நுழைந்தது முதல் எங்கு பார்த்தாலும் இந்தி மயம்.
கண்ணில் பட்டவைகளை கிளிக்கியிருக்கிறேன்.
டிக்கெட் பரிசோதகரிடம் நான் கேட்டது இதுதான்..
“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”
“அப்போ போய் இந்தி கத்துக்கணுமா சார்?”
*******************
(அப்டேட் : சுமார் ஒரு மணி நேரம் கடந்த பின்னர்...)
சென்ற முறை TTE பதில் ஏதும் கூறமால் ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
நானும் அவரை விடுவதாக இல்லை.
மீண்டும் என்னைக் கடந்து செல்லும் போது, இன்னொரு முறை கேட்டேன்.
“இல்லைன்னா.. அந்த நேரத்துல லாலுவுக்கு ஃபோன் பண்ணி என்ன எழுதி இருக்குன்னு இங்கிலீஷ்ல சொல்லச் சொல்லணுமா சார்?”
நக்கலுடன் கேட்டேன்.
அவரோ ஒரு பதிலில் என்னை கடாசி விட்டு சென்றார்.
“எதுக்கு அவ்ளோ கஷ்டப்படுறீங்க? உங்க மினிஸ்டர் வேலுவுக்கு ஃபோன் போட்டீங்கன்னா என்ன எழுதியிருக்குன்னு தமிழிலேயே சொல்லிடப் போறாரு!”
22 comments:
தல
புரோபைல் புகைப்படம் நன்றாக இருக்கிறது
வர வர “ஸ்மார்ட்” ஆகி கொண்டு வருகிறீர்கள்
for your information, indian railway cant make the adve. banners only for tamilnadu.
ofcourse you might know hindi is accepted and read by all the states except tamilnadu
if the train caught fire..please pass this message to your leaders
//for your information, indian railway cant make the adve. banners only for tamilnadu.
ofcourse you might know hindi is accepted and read by all the states except tamilnadu//
They should atleast make the banners in english also.
//if the train caught fire..please pass this message to your leaders//
for what? it will be of no use.But I would be happy if you have travelled with me. :-)
டிடி சும்மா நல்லா பதில் குடுத்தாருங்க.. சும்மா அதிருதுல்ல..
///டிக்கெட் பரிசோதகரிடம் நான் கேட்டது இதுதான்..
“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”
“இந்தி கத்துக்கணுமா சார்?” //
டிக்கெட் பரிசோதகர் என்ன சொன்னார் சொல்லவே இல்லை.....
ஆ.ஞானசேகரன்:
அதற்குப் பிறகு நடந்தவைகளை இந்தப் பதிவிலேயே அப்டேட் செய்திருக்கிறேன்.
//for what? it will be of no use.But I would be happy if you have travelled with me. :-)//
then dont waste the time. read hindi. ofcourse most the rail passengers in Sathbatdi are able to converse in hindi.))
dont worry. make a call to Dr Ramdoss one of his minister is incharge for railway he will do the needful
அனானி:
இந்தப் பதிவு எனக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பதை அலசுவதற்காக அல்ல!
இந்திய இரயில்வேயின் இந்த “Take it for granted” attitudeக்கு எனது கண்டனத்தை பதிவு செய்வதற்காகத்தான், இப்பதிவு.
சதாப்தி மட்டுமல்ல.. பெரும்பாலான இரயில்களில் இதுதான் நிலைமை.
ஒரு மொழி மேல் அளவுக்கு அதிகமாக பாசம் காட்டி, அதன் மேல் நமக்கு வெறுப்பை உண்டாக்குவது இந்த அரசியல்வாதிகள் தான்.
பரஸ்பர நெத்தியடி :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
அருமையான கேள்வியும், அசத்தலான பதிலும் கொண்ட குண்டக்க மண்டக்க பதிவு.
வாழ்த்துக்கள்.
இதே கோணத்தில் நான் எழுதிய மற்றும் ஒரு பதிவு.
விருப்பமிருந்தால் படியுங்கள்
இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா?
அட ரொம்ப நாளைக்கு அப்புறம் உக்காந்து, யோசிச்சு எழுதினேன் - தமிழிஷ்ல பப்ளிஷ் ஆகலை.
சும்மா, எதாவது ஒரு போட்டோவைப் போட்டு ஒரு மொக்கைப் பதிவு போடுவேன். அது பப்ளிஷ் ஆகும்.
உங்கள் பதிவு பப்ளிஷ் ஆனதற்கு வாழ்த்துக்கள்
தமிழ்நெஞ்சம்
//for your information, indian railway cant make the adve. banners only for tamilnadu.//
சரி. அதுக்கென்ன
//ofcourse you might know hindi is accepted and read by all the states except tamilnadu//
அப்படியா. அப்ப அசாம் எல்லாம் இந்தியா கிடையாதா. என்ன கொடுமை சார் இது
ஆங்கிலம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் மொழி. அதில் எழுதினா என்ன
//if the train caught fire..please pass this message to your leaders//
எதுக்கு
//then dont waste the time. read hindi.//
உங்களால ஆங்கிலம் படிக்க முடியாதா. நாங்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்
// ofcourse most the rail passengers in Sathbatdi are able to converse in hindi.))//
அப்படியா
எதுனால அப்படின்னு விளக்க முடியுமா
//dont worry. make a call to Dr Ramdoss one of his minister is incharge for railway he will do the needful//
அப்ப தொடர்வண்டி துறையில் இருக்கும் இந்தி அதிகாரிகளுக்கு சொந்த புத்தியே கிடையாதா
this is an act of zealots.but dmk in UPA govt wont protest.
வர வர “ஸ்மார்ட்” ஆகி கொண்டு வருகிறீர்கள்
post-marriage effect :)
பிரான்சில் இருந்து சென்னை வந்த Delta Airlinesல் பாதுகாப்பு அறிவிப்புகளைத் தமிழில் தந்தார்கள். மும்பையில் இருந்து கோவை வரும் தனியார், indian airlines விமானங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டும் தான்.
உண்மை. தமிழ், இங்கிலீஷ் இது ரெண்டும் போதாதா? இன்னம் எத்தனை நான் படிக்க?
நம்ம கிட்ட காசு வாங்கி தான ரயில் ஓட்டுறாங்க?
இத்தாலி, பிரான்செல லாம் படம் போட்டு இருக்கும்.
எரிஞ்சு சாகப் போறவனுங்களுக்கு ஏன் விளக்கம் எண்டு நினைச்சாங்களோ?
திருமண வாழ்த்துக்கள்.
:-)))))
சுவையான பதிவு
Post a Comment