Saturday, August 2, 2008

நேரா போய் சாவுடா
“போடா.. நேரா போய் சாவுடா”
கஷ்டப்பட்டு தனது கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு கத்தினான், காருக்குள் இருந்தவாரே!

பேர் கூட சொல்லாமல் சாபம் தந்து போய் விட்டான் அந்த குழாய் அணிந்த முனிவன்.

பரபரப்பான வியாழன் இரவு மணி 8. இடம் - ரெசிடென்சி ஓட்டல் அருகில் உள்ள சிக்னல்.
நண்பர்கள் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அலுவலத்திலிருந்து அவர்களைப் பார்ப்பதற்குதான் சென்று கொண்டிருக்கிறேன்.

எல்லாரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டுவிட்டு, அங்கே செல்லத் திட்டம்.
‘ஆண்டவா.. எல்லாம் திட்டமிட்டபடி நடக்கணும்’. ஏற்கனவே எனக்கு கொஞ்சம் டென்ஷன்.

இதில் இவன் வேறு என்னை சாகச் சொல்கிறான்.
நின்றுக் கொண்டிருந்த மாநகரப் பேருந்தை முந்த முயற்சித்த போது, எதிரில் வந்து விட்டான்.
தவறு என்னுடையதுதான். உடனே வண்டியை நிறுத்திவிட்டேன்.

‘சரி.. ரிவர்ஸ் எடுக்கலாம்’ என நினைத்தபோது தான், ‘அடடா.. நம்ம ஓட்டுறது கார் இல்லையே! பைக் ஆச்சே!!’ என்று நினைவுக்கு வந்தது.
கால்களால் நெம்பியவாரே எனது பைக்கை பின்தள்ளினேன்.
‘சீக்கிரம்.. ஒரு கார் வாங்க வேண்டும்.அதற்கு முன்னர் கார் ஓட்டப் பழக வேண்டும்.’

அவனுக்கு வழிவிட்டேன்,
அப்படியும் திட்டிவிட்டான்.

“முடியாதுடா” என்று சொல்லிவிட்டேன்.
‘இவன் என்ன சொல்றது? நம்ம என்ன சாவுறது?’.

அண்ணா சாலையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம்.
நேரம் 9:45. “சரி நேரமாயிடுச்சு.. கிளம்பலாம்” என்றார் ஒரு நண்பர்.

புறப்பட்டோம்.
அங்கு போய் சேரும்போது சரியாக மணி 10.
சத்யம் காம்ப்ளெக்ஸ்.
பிரிவியூவுக்காக டிக்கெட் ஏற்பாடு செய்திருந்தார் நண்பர்.

‘குசேலன்’ படம் பார்ப்பதற்காக.

16 comments:

ரவிசங்கர் said...

:)

VIKNESHWARAN said...

‘குசேலன்’ படம் பார்ப்பதற்காக= தற்கொலை செய்து கொள்வதற்காக...

லக்கிலுக் said...

சாபம் பலிச்சிடுச்சே நாகராஜ் :-(

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:))))

நல்ல விமர்சனம். நீங்கள் அருமையான பதிவராக வருவதற்குறிய எல்லா சான்றும் காணக்கிடைக்கிறது. அசத்துங்க..!

கடைசியில அந்த கார் ஓட்டியின் விமர்சனம் பலிச்சுடுச்சுன்னு சொல்லுங்க!

/குழாய் அணிந்த முனிவன்/

/‘சீக்கிரம்.. ஒரு கார் வாங்க வேண்டும்.அதற்கு முன்னர் கார் ஓட்டப் பழக வேண்டும்.’/

/“முடியாதுடா” என்று சொல்லிவிட்டேன்.
‘இவன் என்ன சொல்றது? நம்ம என்ன சாவுறது?’/

ம்.. கலக்குற நாகூ..!

தம்பி said...

செம ஹியூமர் உங்களுக்கு.
:)))
நல்ல படம் எடுத்தாலும் அத நாஸ்தி பண்ணதான் "நாங்கதான் இருக்கோம்ல" என்று படமெடுக்கிறார் பீ.வாசு.

நந்தா said...

அடிச்சு நொறுக்குங்க. ஆனா இதெல்லாம் எங்க உரைக்க போகுது...

:(

முபாரக் said...

:-)
செம நக்கல். வாழ்த்துகள்

பாராவுக்கு நன்றி, ட்விட்டர்லேர்ந்து வந்தேன்

writerpara கடவுளே, நாகராஜன் இத்தனை சிறந்த எழுத்தாளனா?! http://tinyurl.com/6m9fdp ... about 7 hours ago from TwitterFox

mohamed forrookk said...

அழகான விமர்சனம் நண்பரே.....நல்ல வேலை நாங்க இன்னும் பாக்கல....அழகான மலையாள படத்தை கண்டிப்பாக நம்மாளுக சொதபிருவாங்கனு நினைச்சேன், நடந்துடுத்து...அருமையாக மொழியை கையாண்டு உள்ளிர்கள்...இன்னும் உங்களிடம் இருந்து நிறைய பதிப்புகள் வரவேண்டும்....வாழ்த்துக்கள்

உங்கள் நண்பன்...

முரளிகண்ணன் said...

அசத்திட்டீங்க நாகராஜ், கலக்கல் விமர்சனம்

rsathish said...

machi nice comment about the movie but i dint see the movie nags ....

anand said...

வித்தியாசமான விமர்சன பாணி. படிப்பவர்கள் அனைவரையும் பரவசப்படுத்தி விட வேண்டும் என்கிற ‘அவஸ்தை', எழுத்தாளர்களின் எழுத்தில் பல்லிளிப்பது தெரியும்.அந்த அவஸ்தையும் அவசியமும் இன்றி இயல்பாக எழுதுகிறீர்கள். அதைத் தொலைத்து விடாமல் இருக்க வாழ்த்துகள்

Gomathi said...

Hi, I managed to read your first article. Man I took an hour!!!

வெண்ணை said...

அட்டகாசம் ........சூப்பரா சொன்னே தல!!!!!!!

உங்க வலைப்பக்கம் வருவது இதுதான் முதல் முறை. வாழ்த்துக்கள்!!!!!!!!!

gowri said...

கலக்கர :-)

Venkat R said...

எழுத்தாளர் சுஜாதா, Post Card கதைகள் என்று வகைப்படுத்திய கதைகளில், உங்கள் படைப்பை சேர்க்கலாம்... மேலும் எழுத வாழ்த்துக்கள்... :)

senior said...

u hav a very good sense of humor.....aana thala pavam....its p.vasu who did this murder.