Thursday, January 14, 2010

Twitter - சில தகவல்கள்


ட்விட்டரை ஆர்குட்டுடனோ, ஃபேஸ்புக்குடனோ மட்டும் ஒப்பிடுவதைவிட ப்ளாக்குடனும் சேர்த்து ஒப்பிடுவது ஏற்புடையதாக இருக்கும்.

ட்விட்டரின் பலமே அதன் சுலபமான தன்மைதான்.
இது ஒரு விதமான மைக்ரோ-ப்ளாகிங்.

ட்விட்டரில் இருப்பவர்களில் உங்களுக்கு பிடித்தமானவர்களை நீங்கள் தொடரலாம்.
அதே போல் உங்களையும் மற்றவர்கள் தொடரலாம்.

ட்விட்டர் என்ற ஐடியாவுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவைச் சேர்ந்த Jack Dorsey.
இதேபோல் Blogger (blogspot.com) என்ற தளத்தை உருவாக்கி பின்னர் அதனை கூகுளுக்கு விற்றவர் Evan Williams.
இருவரும் இணைந்து 2007ல் Twitter என்ற நிறுவனத்தை தோற்றுவித்தபோது, Jack Dorseyக்கு 30 வயதும், Evan Williamsக்கு 35 வயதும்தான் நிரம்பியிருந்தன.


ட்விட்டர் மூலம்:

1. நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது, படிக்கும் புத்தகம், பார்த்த சினிமா போன்ற உங்கள் வாழ்வின் நிகழ்வுகளை பதிவு செய்வதோடு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

2. இதே போல ட்விட்டரில் இருக்கும் உங்கள் நண்பர்கள், வி.ஐ.பி’க்கள் (சசிதாரூர் போன்ற) என்ன செய்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

3. குறிப்பிட்ட ஒருவருடனோ அல்லது உங்களை தொடரும் நபர்கள் அனைவருடனோ ஒரே நேரத்தில் உங்கள் செய்தியை Broadcast செய்ய முடியும்.

4. உங்களுக்கு திடீரென ஒரு சந்தேகம் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, “எந்த Digital SLR camera ரூ.50,000 பட்ஜெட்டிற்கு சிறந்தது?” என்று. உடனே நீங்கள் இந்த கேள்வியை ட்விட்டரில் டைப் செய்து அனுப்புலாம்(Tweet). உங்களை தொடர்பவர்களில் (Followers) யாரேனும், பதில் தெரிந்தால் உடனே உங்களுக்கு அதனை அனுப்புவார்கள். அல்லது அவர்களுடைய Followers'களுக்கு அதனை உங்கள் பெயருடன் Retweet செய்வார்கள். இது ஒரு chain போலத் தொடர்ந்து உங்களுக்கு எதிர்பார்க்காத தரப்புகளில் இருந்து பல பதில்கள் வரும். அது மட்டுமில்லாமல், இதனால் உங்களுக்கு Camera மற்றும் Photography மேல் ஈடுபாடு உடைய புதிய நண்பர்களும் அமைவார்கள். அவர்கள் உங்களை Follow செய்தும், நீங்கள் அவரை Follow செய்தும் உங்கள் அலைவரிசையை உறிதிப்படுத்தலாம்.

5. நிறுவனங்கள் ட்விட்டரை தங்களது செய்தித் தொடர்பாளராக பயன்படுத்துகின்றன. தங்களின் நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை உலகிற்கு ட்விட்டர் மூலம் தெரியப்படுத்துவதன் மூலம், தங்களின் வாடிக்கையளர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க விரும்புகின்றன.

ட்விட்டர் - சில தகவல்கள் :

1. இதுவரை கிட்டத்தட்ட 1.8 கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்துகிறார்கள்.

2. ட்விட்டரை பயன்படுத்துவதில் அமெரிக்கர்கள் (62%) முதலிடம் வகிக்கிறார்கள். இந்தியர்கள்(0.87%) 9வது இடத்தில் இருக்கிறார்கள்.

3. 65 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.

4. வார நாட்களில் செவ்வாய்க் கிழமைகளில் தான் அதிகமான ட்வீட்டுகள் நிகழ்கின்றன. திங்கள்கிழமைகளில் தான் மிகவும் குறைவான ட்வீட்டுகள்.

5. ட்விட்டரில் பதிவு செய்த 21 சதவீதம் பேர், இதுவரை ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லையாம்.

6. ட்விட்டரில் குறிப்பிட்ட 5 சதவீதத்தினர்தான் கிட்டத்தட்ட 75 சதவீத ட்வீட்டுகளை நிகழ்த்துகிறார்கள்.

7. மொத்தம் பதிவு செய்தவர்களில் ஆண்களை (47%) விட பெண்கள் (53%) அதிகம்.

8. 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ட்விட்டரின் வலைத்தளத்துக்கு வராமலேயே, வேறு சில மென்பொருள்கள் மூலம் ட்விட்டரை பயன்படுத்துகிறார்கள். ட்விட்டரின் பலமே இதுதான்.